spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!

-

- Advertisement -

"நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

we-r-hiring

18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரபேலி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த நிலையில், ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

MUST READ