spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியீடு... ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை...

பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியீடு… ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை…

-

- Advertisement -
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும், இந்தியா கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான இடங்களை தக்க வைத்துள்ளன.

கேரளா, தமிழ்நாடு, மராட்டியம், உ.பி. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. தேர்தல் முடிவுகள் அவ்வப்போது வௌியாவதால் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இச்செய்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ