- Advertisement -
சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ரமணா படதை இயக்கினார். இப்படம் கோலிவுட் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
தற்போது பாலிவுட்டில் புதிய படம் இயக்கி வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும், கமர்ஷியல் நடிகராகவும் வலம் வரும் சல்மான் கான் இதில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகக ராஷ்மிகா மந்தனாவும், கரீனா கபூரும் நடிக்கின்றனர். மேலும் திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வௌியானது.