spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏ -லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

ஏ -லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்….. பிரபல நடிகை வேதனை!

-

- Advertisement -

 

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

we-r-hiring

என்னதான் பெண்கள் திறமையாக இருந்தாலும் அவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவ்ளோ ஈஸியா அமையுறது இல்லை. இந்நிலையில் பிரபல நடிகை இஷா கோப்பிகர் சமீபத்திய உரையாடல் ஒன்றில் அவருடைய திரைப்பயணத்தில் சந்தித்த சாவால்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

1990-களில் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த நடிகை ஈஷா கோபிகர் தமிழ், கன்னடம் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் ”என் சுவாச காற்றே”, ”காதல் கவிதை” , “நெஞ்சினிலே”, “நரசிம்மா” போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

இந்த நிலையில்  இஷா கோப்பிகர் தான் 2000- களில் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கும் பட்சத்தில் தன்னை விட வயதான நடிகர்களை காதலிப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது “அசௌகரியமாக” இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மட்டன் பிரியாணியில் புழு.. சென்னையில் பிரபல உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அப்படி நடிக்கும் போது சில காட்சிகளில் உடன் நடிக்கும் சக நடிகர்களை அல்லது காதலரை கட்டி அணைப்பது போன்ற உணர்வு ஏற்படாது, மாறாக தந்தையை கட்டி அணைப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக உணர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் தான் பாலிவுட்டுக்கு புதியவர் என்பதால் வேறு வழியில்லை என்பதாலும் பாலிவுட்டில் இது வழக்கமாக இருந்து வந்ததாலும் அதை ஏற்றுக்கொண்டதாக கூறினார். அத்துடன் தன்னை பலரும் ஐட்டம் கேர்ள் என்று அழைப்பதை வெறுப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!அதே சமயம் ரோஜா பட நடிகரான அரவிந்த் சுவாமி மீதான தனது கிரஷ் பற்றி கூறி தமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதாவது தமிழ் திரை உலகில் உள்ளவர்கள் மிகவும் இனிமையானவர்கள், எளிமையானவர்கள், பிராண்ட் கான்ஷியஸ் அல்லாதவர்கள் என அழகாக விவரித்தார்.
இஷா கோப்பிகரை, முன்னனி நடிகர் ஒருவர் தன்னைத் தனியாகச் சந்திக்கச் சொன்ன ஒரு நிகழ்வையும் விவரித்தார்.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

“எனக்கு 23 வயதாக இருந்தபோது, எனது ஓட்டுனர் மற்றும் வேறு யாரும் இல்லாமல் அவரை தனியாக சந்திக்கும்படி ஒரு நடிகர் என்னிடம் கேட்டார். அவருக்கு மற்ற நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் அவர் தன்னை பற்றி பரவும் சர்ச்சைகள் யாவும் வதந்திகள் என கூறி அழைத்துள்ளார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்”.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!அடுத்ததாக,

” ‘கல்லாஸ்’ பாடலில் ஆடினேன் (அதுவும் நான் முதன்முறையாக நடனம் ஆடியது , ஆனால் இன்னும் வெளிவரவில்லை). ஹீரோவால் ஆடமுடியாததால் எனக்கு மட்டும் டான்ஸ் கற்று கொடுத்தார்கள். நான் நடனமாட ஆரம்பித்தேன், அப்போது பட குழுவினர் அனைவர் முன்னிலையில் ‘என்ன இது? பாலிவுட்டில் இவ்வளவு பெரிய பெயர் கொண்ட நீங்க , இப்படித்தான் ஆடுவீர்களா? “ என தென்னக நடன இயக்குனர் ஒருவர் கேட்டார். பின்னர் பழம்பெரும் சரோஜ் கானின் குழுவிடம் நடனம் கற்றுக்கொண்டதையும் அவர் நினைவு படுத்தினார்.

ஏ - லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் உதவியாளர்கள் சிலர் தன் கையை அழுத்தி, ”ஹீரோஸ் கே சத் பஹுத் தோஸ்தி கர்னி படேகி” அதாவது நடிகர்களுடன் நீங்கள் மிகவும் நட்பாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். நட்போடு பழகுவது சரி, அது என்ன நெருக்கமான நட்பு என்பது எனக்கு அப்போது புரியவில்லை” என தெரிவித்தார்.

ஏலிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்..... பிரபல நடிகை வேதனை!

இவ்வாறு திறமை இருந்தும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வருவதற்குத் தடையாக இருந்த திரையுலக அரசியலைப் பற்றியும் இஷா கோப்பிகர் கண்ணீர் விட்டார். காம்ப்ரமைஸ் செய்தால் மட்டுமே பாலிவுட்டில் வலம் வர முடியும் என்பதையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

MUST READ