அம்பத்தூர் அருகே பிரபல தனியார் உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகமாம ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடைக்கு, அதே பகுதியில் வசித்து வரும் குணா என்பவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதில் குழந்தைகள் சாப்பிட்ட மட்டன் துண்டின் எலும்பில் புழு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குணா, ஹோட்டல் மேலாளரிடம் முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோவையும் குணா பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உணவை குழந்தைக்கு கொடுப்பதற்காக வாங்கினேன். எலும்பை அவர்களுக்கு சாப்பிட தெரியாது என்பதால் அதனை கடித்து உடைத்து கொடுத்தேன். அதில் புழுக்கள் உள்ளது. இதே உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா? பதில் சொல்லுங்கள்” என குணா கேட்பதும், அதற்கு மேலாளர் பதில் சொல்ல முடியாமல் இருப்பது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது இரு மகள்கள் மற்றும் மனைவியை அழைத்துச்சென்ற குனா, அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டார். பிரபல உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற தனியார் உயர் உணவகங்களில் தொடர்ந்து திடிர் சோதனையில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.