உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


அதிமுக தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலான நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்ற பரபரப்பான தீர்ப்பை வந்தது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகம், காஞ்சிபுரம், மதுராநாதகம், கிருஷ்ணகிரி என்று அனைத்து மாவட்ட, நகரங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் பட்டாசுகள் வடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினர். கிருஷ்ணகிரி நகர கழகம் சார்பில் அவை தலைவர் காத்தவராயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கிருஷ்ணகிரி ஐந்து ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் வேலன் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மட்பூல் மற்றும் நகர கழக பொறுப்பாளர்கள் குரு, கார்த்திக் பால்ராஜ் ,சந்துரு, விக்கி, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதில் எடப்பாடிபழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் எனவும் அவர் இடைகால பொது செயலாராக
தொடர்வார் எனவும் நீதிமன்ற தீர்ப்பால் அதிமுகவினர் மதுராந்தகத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிரே பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி அளித்தள்ள பேட்டியில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தூக்கமில்லை, நேற்றிரவு முழுவதும் தூங்கவில்லை. டி.குன்னத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வேண்டிக்கொண்டேன். அவர்கள் இருவரின் ஆசியோடு தீர்ப்பு சாதகமாக அமைந்தது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மேலும் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் எதிரிகள் கனவு தூள் தூளாக போனது என்று கூறினார்.


