கோவை மாவட்டத்தில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு. நேர்மையான குழந்தைகளுக்கு போலிஸார் பரிசு வழங்கி கெளரவிப்பு.
கோவை அருகே சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டினர். சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 15-ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ மாணவியர் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது. அங்கு வந்து கொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(9) தர்சன்(9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல் நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையை பாராட்டும் விதமாக நேற்று(23.02.2023) அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டினார்கள்.
“வளரும் பயிர் முளையிலெயே தெரியும்” என்பது போல சிறு வயதிலேயே நல்ல சிந்தனையுடன் வலம் வரும் இந்த சிறார்கள் எதிர்கால தலைவர்கள் என்றால் அது மிகை அல்ல!


