Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவை காப்பாற்றுவோம்- ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ

தேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவை காப்பாற்றுவோம்- ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ

-

- Advertisement -

தேர்தல் ஆணையத்தை நாடி விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவோம் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு | Dinamalar Tamil News

we-r-hiring

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் செல்வி ஜெயலலிதாவின் திருவ உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுகவினர் பிறந்த நாளை கொண்டாடினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், “தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று மொட்டையா மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். விரைவில் தேர்தல் ஆணையம் சென்று ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

MUST READ