ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அத்தொகுதிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.


அப்போது பேசிய சீமான், “ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே தேர்தல் என்றெல்லாம் கூறுகிறார்கள், அப்படி கூறுபவர்கள் ஒரே சுடுகாடு, ஒரே குடிநீர் தொட்டி கொண்டு வர முடியுமா? தனித் தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இவர்களை தான் தீண்டாமை வழக்கில் போட வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். நாங்கள் கேட்பது இட ஒதுக்கீடு அல்ல இடப் பங்கீடு, தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள், பின்னர் சர்க்கரை நாற்காலியில் செல்லும்போது அதிகாரத்தை கொடுத்தால் பயனில்லை, நச்சுக்காற்றை உயிர்க்காற்றாக மாற்றி கொடுக்கக்கூடிய பணியை மரங்கள் தான் செய்கின்றது. மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? கிளீன் இந்தியா கொண்டுவந்த பெருமக்கள் ஏன்? கிரீன் இந்தியா கொண்டு வரவில்லை.
நெகிழியை ஒழிக்காமல் தூய்மை இந்தியாவை உருவாக்க முடியாது, அள்ளுவது தூய்மை அல்ல, என்னை சத்தமாக பேசாதே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தவிர மருத்துவம் இருந்தால் கூறுங்கள் என்று தெரிவித்து விட்டேன். சத்தியத்தை சத்தமாகவும், உண்மையை உரக்கவும் பேச வேண்டும் என்பதுதான் எனது கோட்பாடு. திமுகவை விட்டால் அதிமுக… அதிமுகவை விட்டால் திமுக… வேறு வழியில்லை என்று எங்களை பலி சொல்ல முடியாது.
புரட்சிகர அரசியல் வழியாக மாறி. சாதி மத உணர்வை கடந்து நாங்கள் தமிழர்கள் தமிழ் தேசியர்கள் என்ற உணர்வோடு நிற்கின்றோம். எங்களை கைவிட்டால் உங்களை காப்பாற்ற நாதியில்லை. இவன் சாமியை காப்பாற்ற அரசியல் பேசுவான்.நீ கும்பிட்ட ஆயிரம் சாமிகள் உள்ளது. நாம் வாழ ஒரே பூமி தான் உள்ளது. நாம் வாழுகின்ற பூமியை காப்பாற்ற வந்த புரட்சியாளர்கள் நாங்கள். அனைத்து உயிர்களுக்கும் சேர்ந்து அரசியல் செய்ய வந்த பிள்ளைகள் நாங்கள்” எனக் கூறினார்.
