spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா - மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

-

- Advertisement -

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா - மு.க ஸ்டாலின் வாழ்த்து

we-r-hiring

நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் கோட்டா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓம் பிர்லா. 17வது மக்களவையின் சபாநாயகராக இருந்த சூழலில் 18வது மக்களவையிலும் சபாநாயகராக ஓம் பிர்லா பெயர் தேசிய ஜனநாயக கூட்டணியால் முன் மொழியபட்டது.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி! (apcnewstamil.com)

குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை அடிப்படையில் ஓம் பிர்லா வெற்றி பெற்று நேற்று சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிர்லாவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி டெல்லியில் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து வழங்கினார்.

MUST READ