நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இருப்பினும் இவருடைய அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதே சமயம் கடந்த ஆண்டு இறுதியில் பிரபாஸ், பிரித்விராஜ் கூட்டணியில் வெளியான சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சந்தோஷ் நாராயணனின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ் தவிர அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் சிலர் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இருப்பினும் ஒரு சிலர் இப்படம் கார்ட்டூன் படம் போல இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் முதல் நாளிலேயே 191.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இனிவரும் நாட்களில் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- Advertisement -