spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது...... 'கல்கி' படத்தை பாராட்டிய ரஜினி!

இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது…… ‘கல்கி’ படத்தை பாராட்டிய ரஜினி!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கல்கி திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது...... 'கல்கி' படத்தை பாராட்டிய ரஜினி!பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்திருக்கும் நிலையில் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி போன்றோரும் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினி தனது சமூக வலைதள பக்கத்தில் கல்கி 2898AD படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்கி படம் பார்த்தேன். என்ன ஒரு படைப்பு. இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ