விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித் தவிர அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா போன்ற பலரும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அதன் பிறகு சிறிய இடைவெளிக்குப் பின் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் கார் சாகசக் காட்சிகளுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை இரவு 7.03 மணி அளவில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ரிலீஸ் தேதியுடன் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tomorrow Sunday 7.03 PM!!!@LycaProductions
— Suresh Chandra (@SureshChandraa) June 29, 2024
இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.