Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- ரூ.51.31 லட்சம் பறிமுதல்

ஈரோடு இடைத்தேர்தல்- ரூ.51.31 லட்சம் பறிமுதல்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரதா சாகு

we-r-hiring

சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, “688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது. 64.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.51.31 லட்சமும், ரூ.11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், பரிசு பொருட்கள் உட்பட மற்றவை ரூ.1.33 லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், வெளியூர்களில் இருந்து வந்து இருக்கும் அனைவரும் 6 மணிக்கு பிறகு தொகுதியில் இருக்ககூடாது. 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும், 1430 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் 310 இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. வாக்குசாவடியில் மட்டும் 1206 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்” எனக் கூறினார்.

MUST READ