Homeசெய்திகள்தமிழ்நாடுதாயார் மறைவு- காலை பிடித்து கதறிய அழுத ஓபிஎஸ்

தாயார் மறைவு- காலை பிடித்து கதறிய அழுத ஓபிஎஸ்

-

- Advertisement -

உடல் நலக்குறைவால் 95 வயதில் காலமான தாயின் முகத்தைப் பார்த்து பின் தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் காண்போரை கலங்க செய்துள்ளது.

மறைந்த தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்

we-r-hiring

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ. பழனியம்மாள் நாச்சியார் (95) கடந்த மாதம் உடல் நலக் குறைவு காரணமாக தேனியில் நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த 22.02.2023 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் தேனி நட்டாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்து பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் சென்னை கிளம்பி சென்றார். இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். பெரியகுளத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் நேற்று இரவு 10.10 மணி அளவில் மரணம் அடைந்தார்.

தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்.. தாயார் மறைவில் நெகிழ்ச்சி!, ops -crying-on-his-mother-death-at-theni-periyakulam

தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தகவல் அறிந்ததை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் வந்த பன்னீர்செல்வம் தாயாரின் உடலை பார்த்த பின் காலமான தன் தாயின் காலை பிடித்து கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து தாயின் உடலுக்கு சாங்கிய சம்பிரதாயங்களை செய்த பின்பு தாயின் உடலுக்கு மாலை அணிவித்த பின்பு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காலமான ஓபிஎஸ் தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது தாயாரின் இறுதிச்சடங்கு 25.02.2023 மாலை நான்கு மணி அளவில் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ