ஹெச். வினோத், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். அடுத்ததாக இவர் விஜய் நடிப்பில் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் ஹெச். வினோத், நடிகர் தனுஷை இயக்கப் போவதாகவும் அந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இந்நிலையில் ஹெச். வினோத் சிவகார்த்திகேயனை இயக்கப் போவதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி , வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக தான் ஹெச். வினோத், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் ஹெச். வினோத், அந்த ஒப்பந்தத்தில் விஜயை தொடர்ந்து தனுஷ் படத்தை முடித்த பிறகு அஜித் அழைத்தால் அஜித்தை இயக்குவேன் அதன் பின்னர் தான் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -