பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898AD. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சந்தோஷ் நாராயணனின் இசையிலும் இந்த படம் வெளியானது. இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன் தீபிகா படுகோன் பசுபதி ஆகியோரும் நடித்திருந்தனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. முதல் பாகமாக வெளியான கல்கி 2898AD திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் வெளியான 8 நாட்களில் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான சில படங்கள் பிரபாஸுக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை.
𝐓𝐡𝐞 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐫𝐮𝐧 𝐜𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐬…
Witness the magic of #Kalki2898AD, now in theaters.#EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/7UGJHXcbJM
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 3, 2024
இருப்பினும் கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால் ஆயிரம் கோடியை தொடவில்லை. இந்நிலையில் கல்கி 2898AD திரைப்படம் விரைவில் 1000 கோடியை தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. எனவே கல்கி, பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.