Homeசெய்திகள்க்ரைம்பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!

-

- Advertisement -

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

we-r-hiring

தொடர் விசாரணையில் மேலும் பல கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட 8 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்களிடம் தனிமையான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளது.

MUST READ