Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘இந்தியன் 2’ பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

கடந்த 1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கியிருந்த படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதை களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 'இந்தியன் 2' பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!எனவே கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமல் தவிர சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.'இந்தியன் 2' பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்! ரவிவர்மன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்ற போதே அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டதால் அதனை அப்படியே இந்தியன் மூன்றாம் பாகமாக உருவாக்கி விட்டனர் என தகவல்கள் வெளியானது. அதன்படி அடுத்த ஆண்டு இந்தியன் 3 படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தான் சேனாபதியின் தந்தையாக நடித்திருப்பதாகவும் அதுவே இந்தியன் 3 படத்திற்கு உங்களை கவர்ந்திழுக்கும் என்று கூறியிருந்தார்.'இந்தியன் 2' பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்! அதேபோன்று தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியன் 3 படத்திற்கு லீட் கொடுக்கும் வகையில் புரோமா வீடியோ ஒன்று இடம்பெற்றுள்ளதாம். இது திரையரங்குகளில் இந்தியன் 2 படத்தை காண வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற அப்டேட்டுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்துகிறது.

MUST READ