மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு தல ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு ஜாதி மத பேதமின்றி சமூக மார்க்கஸ் என்ற இஸ்லாமிய அமைப்பினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் இஸ்லாமிய மதத்தினரின் மர்க்கஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் வருடம்தோறும் சமூக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அத்னபடி கடந்த வருடம் 200 பேருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக இந்த வருடம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக கடந்த ஆறு மாத காலமாக வறுமையில் வாடி வரும் இந்து , இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.


அப்படி தேர்வு செய்யப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு இன்று , மார்க்ஸ் அமைப்பினர் திருமணம் செய்து வைத்தனர். ஒவ்வொரு ஜோடிக்கும் 5 சவரன் தங்க நகை உட்பட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு இந்த திருமணம் நடத்தப்பட்டது. குறிப்பாக 400 ஜோடிகளில் 37 ஜோடிகளுக்கு அங்குள்ள மாரியம்மன் கோவிலிலும், 3 ஜோடிகளுக்கு கிருஸ்துவ தேவாலயத்திலும், மீதமுள்ள 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு மார்க்ஸ் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழா திடலிலும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த அந்த அமைப்பை சேர்ந்த உலமாக்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த அமைப்பு சார்பாக தோராயமாக ரூ. 16 கோடி செலவில் வறுமையில் வாழ்ந்து வரும் 400 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


