spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..

ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை(பிப் 27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 1206 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. அதேபோல் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன.

TN State Elaction Commission - TNEC

we-r-hiring

வாக்குச்சாவடி அலுவலர்கள் பொறுப்பேற்று வாக்கு சாவடிகளை தயார் செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி போன்ற பிரதான கட்சிகள், சுயேட்சைகள் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1 விவி பேட் இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றன. மாலை 6:00 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிகளை தயார் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்ததை அடுத்து, அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Erode East Asssembly - ஈரோடு கிழக்கு தொகுதி

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் செல்வதற்கான சாய்தள பாதை மற்றும் சக்கர நாற்காலி ஆகியவையும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப்பதிவு மையங்களில் பந்தல் போடப்பட்டுள்ளது. நாளை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதற்கு முன்பாக, முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின் தேர்தல் நடைபெற உள்ளது..

 

MUST READ