இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார். 86 வயதான ரத்தன் டாடா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் டாடா காலமானார். இது இந்தியா மற்றும் உலகளாவிய வணிக சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். புகழ்பெற்ற தொழிலதிபர் அக்டோபர் 9 (புதன்கிழமை) இரவு காலமானார். அவரின் மறைவு நாட்டில் பரவலான துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன் கார்க்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.