நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் விடாமுயற்சி வருகின்ற பிப்ரவரி 6 அன்று வெளியாக இருக்கிறது. குட் பேட் அக்லி ஏப்ரல் 10 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், அடுத்தடுத்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் இன்னும் 9 மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிப்பதில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார். அதன் பின்னர் இவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் 2025 இன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Congratulation to #Ajithkumar sir for being honoured with the prestigious #Padmabhushan award 😍👍
நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்
😍#பத்மபூஷன்அஜித்குமார் pic.twitter.com/bJfAwJZxOE— M.Sasikumar (@SasikumarDir) January 25, 2025
இவருக்கு சசிகுமார் போன்ற திரைப் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அவருடைய ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் கலைஞர் தட்சிணாமூர்த்தி, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.