spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsசெம ட்விஸ்ட்.... பேயாக நடித்திருப்பது யார் தெரியுமா?.... 'டிடி நெக்ஸ்ட் லெவல்' ட்ரைலர் வெளியீடு!

செம ட்விஸ்ட்…. பேயாக நடித்திருப்பது யார் தெரியுமா?…. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ட்ரைலர் வெளியீடு!

-

- Advertisement -

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.செம ட்விஸ்ட்.... பேயாக நடித்திருப்பது யார் தெரியுமா?.... 'டிடி நெக்ஸ்ட் லெவல்' ட்ரைலர் வெளியீடு!

சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்ட ராஜேந்திரன், யாஷிகா, கஸ்தூரி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1,2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களைப் போல் இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி நடிகர் சந்தானம் எந்த படத்தில் சினிமா விமர்சகராக நடித்திருக்கிறார். அவர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

we-r-hiring

இந்த ட்ரைலரை பார்க்கும்போது செல்வராகவன் இந்த படத்தில் பேயாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வலுவாக அமைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. ட்ரெய்லரில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படத்திலிருந்து உயிரின் உயிரே பாடல் ரீ-க்ரியேட் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லரும் தரமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ