HomeBreaking Newsஅடுத்த ஹிட்டுக்கு தயாரான தனுஷ்.... சுட சுட வந்த 'இட்லி கடை' பட அறிவிப்பு!

அடுத்த ஹிட்டுக்கு தயாரான தனுஷ்…. சுட சுட வந்த ‘இட்லி கடை’ பட அறிவிப்பு!

-

- Advertisement -

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஹிட்டுக்கு தயாரான தனுஷ்.... சுட சுட வந்த 'இட்லி கடை' பட அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் தனது 52 ஆவது படமான இட்லி கடை திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி பகுதியில் தொடங்கப்பட்டு ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 75 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் சில முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஹிட்டுக்கு தயாரான தனுஷ்.... சுட சுட வந்த 'இட்லி கடை' பட அறிவிப்பு!இதற்கிடையில் இந்த படம் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 2025 அக்டோபர் 1ஆம் தேதி இட்லி கடை திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ