ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் தாடி பாலாஜியின் இரங்கல் பதிவு
”எனக்கு பேச்சே வரலங்க. அவ்ளோ நல்லவன். ஒரு நல்ல கலைஞர். அதை தாண்டி யாராவது கஷ்டம்னு சொன்னா அடுத்த நிமிஷம் உதவி செய்பவர். அதில் நானும் ஒருவன். எனக்கும் உதவி பண்ணி இருக்கிறார் .

ஒரு நிகழ்ச்சியில் நான் அவரிடம் கூறினேன் எனது ஆயுள் எவ்வளவு என்று தெரியாது ஆனால் அதில் பாதி உனக்கு தருகிறேன் என்று .கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என புரிய வில்லை. ரோபோ மிகப்பெரிய உழைப்பாளி. அதை தாண்டி அவர் இருக்கிற இடம் கல கல வென இருக்கும். ரொம்ப பிரண்ட்லி. அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலை என்பது எனக்கு பெரிய ஷாக்காக இருக்கிறது.
இன்று (செப் 18) காலை அவருடைய மகளிடம் பேசினேன். அவர் நார்மலாக இருக்கிறார் என்று தான் கூறினார். ஆனால் மாலையில் கிடைத்த இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது.
கடின உழைப்போடு உயர்ந்த அனைவரையும் கடவுள் ஏன் தண்டிக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ரோபோ ஷங்கரின் கடின உழைப்பு என்பது மிக அதிகம். தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கு அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய உச்ச நட்சத்திரங்களோடு இணைந்து நடிக்கிற அளவுக்கு முன்னேறி இருந்த ஒருத்தர். எல்லாதையும் விட HE IS A VERY LOVABLE PERSON “என தாடி பாலாஜி பேசியுள்ளார்.