spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... சிம்பு குரலில் வெளியான 'ஏன்டி விட்டுப் போன' பாடல் இணையத்தில் வைரல்!

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’…. சிம்பு குரலில் வெளியான ‘ஏன்டி விட்டுப் போன’ பாடல் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

டிராகன் படத்திலிருந்து ஏன்டி விட்டுப் போன பாடல் வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... சிம்பு குரலில் வெளியான 'ஏன்டி விட்டுப் போன' பாடல் இணையத்தில் வைரல்!

லவ் டுடே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தற்போது டிராகன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.

we-r-hiring

அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து ‘ஏன்டி விட்டுப் போன’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்திலும் வைரலாகி வருகிறது. மேலும் டிராகன் திரைப்படமானது 2025 பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ