HomeBreaking News100 கோடி கிளப்பில் இணைந்த 'ரெட்ரோ' .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

100 கோடி கிளப்பில் இணைந்த ‘ரெட்ரோ’ …. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.100 கோடி கிளப்பில் இணைந்த 'ரெட்ரோ' .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருந்த திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படம் கடந்த மே 1 அன்று திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற ஷிங்கிள் ஷாட் காட்சிகளும், கனிமா பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதன்படி சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் சில தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலகலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 100 கோடி கிளப்பில் இணைந்த 'ரெட்ரோ' .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் இந்த படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 104 கோடி வரை வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் இனிவரும் நாட்களிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ