போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர நடிகர் சிம்பு, STR 50, STR 51 ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில்தான் நடிகர் சிம்புவிற்கு அதிர்ச்சி தரும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியவர்களில் ஒருவர் சர்புதீன். இவர் சிம்புவின் முன்னாள் உதவியாளரும் நெருங்கிய நண்பரும் ஆவார். இவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது எல்டாமஸ் சாலையில் இருக்கும் சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடத்தப்பட்டதாகவும், அந்த விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சர்புதீனிடமிருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், சொகுசு காரும் பரிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் சிம்புவிற்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


