HomeBreaking Newsகவனம் ஈர்க்கும் 'சுமோ' படத்தின் டிரைலர்!

கவனம் ஈர்க்கும் ‘சுமோ’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

சுமோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.கவனம் ஈர்க்கும் 'சுமோ' பட டிரைலர்!

மிர்ச்சி சிவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சுமோ. இப்படத்தை ஹோசிமின் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து பிரியா ஆனந்த், யோகி பாபு ,சதீஷ், நிழல்கள் ரவி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் பலமுறை ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கவனம் ஈர்க்கும் 'சுமோ' பட டிரைலர்!இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஜப்பானில் நடக்கும் பிரபல மல்யுத்தம் விளையாட்டான ‘சுமோ’வை மையப்படுத்திய கதாபாத்திரம் தான் இந்த படத்தில் மெயின் கதாபாத்திரமாக இருக்கிறது.

அந்த சுமோ வீரர் ஏதோ ஒரு காரணத்திற்காக குழந்தையாக மாற அவரை மிர்ச்சி சிவா ஆதரிக்கிறார். இதைத்தொடர்ந்து அவரை பழைய நிலைமைக்கு மாற்றி விளையாட்டில் ஜெயிக்க வைத்தாரா? என்பதுதான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ