spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

we-r-hiring

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளபதிவில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ