டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது மை லார்ட், பிரீடம் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அதேசமயம் இவர் டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கலகலப்பான குடும்பப் பொழுது போக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
அதன்படி ஏற்கனவே டைட்டில் டீசர், போஸ்டர்கள், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஆச்சாலே எனும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியிருக்கும் நிலையில் ஷான் ரோல்டன் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.