spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsவடிவேலு - பஹத் பாசில் நடிக்கும் 'மாரீசன்'.... கவனம் ஈர்க்கும் டீசர்!

வடிவேலு – பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’…. கவனம் ஈர்க்கும் டீசர்!

-

- Advertisement -

வடிவேலு – பஹத் பாசில் நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.வடிவேலு - பஹத் பாசில் நடிக்கும் 'மாரீசன்'.... கவனம் ஈர்க்கும் டீசர்!

வடிவேலு – பஹத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மாரீசன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள நிலையில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது 2025 ஜூலை மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்த டீசரில் வடிவேலு – பஹத் பாசில் ஆகிய இருவரும் பைக்கில் பயணம் செய்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்வது போல் காட்டப்படுகிறது. இந்தப் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் சீரியஸானா கதாபாத்திரம் போல் தெரிகிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ