வீர தீர சூரன் படத்திலிருந்து ஆத்தி அடி ஆத்தி எனும் பாடல் வெளியாகி உள்ளது.
விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தினை அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே ‘கல்லூரும்’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதைத்தொடர்ந்து ‘ஆத்தி அடி ஆத்தி’ எனும் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் சதிகா ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.