spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsதனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்.... குவியும் வாழ்த்துகள்!

தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்…. குவியும் வாழ்த்துகள்!

-

- Advertisement -

நடிகர் விஷால் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்.... குவியும் வாழ்த்துகள்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவருடைய மிடுக்கான நடிப்பு, கலக்கலான நடனம் ஆகியவை இவருக்கு ஏராளமான ரசிகர்களை சேகரித்து தந்தது. அந்த வகையில் இவர், தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என்று கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) நடிகர் விஷால் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நடிகர் விஷாலின் திருமணம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்.... குவியும் வாழ்த்துகள்!அந்த வகையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்த பின்னர் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என அறிவித்திருந்த விஷால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தினார். அதன்படி விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதாகவும், தங்களின் திருமணம் குறித்த அப்டேட்டை ஆகஸ்ட் 29 தன்னுடைய பிறந்தநாளில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார் விஷால். எனவே இன்று விஷாலுக்கும் – சாய் தன்சிகாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

அத்துடன், “இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் எனது சிறப்பு பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இன்று நடந்த எனது நிச்சயதார்த்தம் பற்றிய நல்ல செய்தியை எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் சாய் தன்ஷிகாவுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இப்பொழுது நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எப்போதும் போல் உங்கள் ஆசிர்வாதங்களையும் நல்ல ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவும், விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ