spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralமேண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து- சென்னை விமான நிலையம் அறிவிப்பு

மேண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து- சென்னை விமான நிலையம் அறிவிப்பு

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, இதுவரையில் 7  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று, இதுவரையில் 7  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Chennai Airport

 அதிகாலை 00.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும்  ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஆகிய 4  புறப்பாடு விமானங்களும், இதை போன்று இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானம், மாலை 5:50  மணிக்கு கடப்பாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

we-r-hiring

சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 7 பயணிகள் விமானங்களை ரத்து செய்துள்ளதாக, விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை  பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

MUST READ