spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralஅம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...

அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது A man arrested at Ambattur for running a fake bank

-

- Advertisement -

தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற பெயரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கி அம்பத்தூரில் கார்ப்பரேட் அலுவலகம் அமைத்து கடந்த இரண்டு வருடமாக செயல்பட்டு வந்துள்ளது. உண்மையான வங்கி போன்று செயல்பட்டு வந்த இதன் கிளைகளில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

we-r-hiring

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கொடுத்த புகாரில் கடந்த 8 -ம் தேதி இந்த போலி வங்கியை நடத்தி வந்த சந்திர போஸ் என்ற நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபோஸை மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

MUST READ