spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralமெட்ரோ பணி- அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணி- அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

-

- Advertisement -

மெட்ரோ பணிகள் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

metro train
metro train

இது தொடர்பாகச் சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் சிஎம்ஆர்எல்-ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01/02/2023 ம் தேதி முதல் ஒரு வாரக் காலத்திற்குச் சோதனை ஓட்டம் நன்குச் செயல்பட்டதால் சிஎம்ஆர்எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

we-r-hiring

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே. சாலையை நோக்கி வழக்கம் போல் செல்லலாம். டிடிகே. சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் பாலத்தை நோக்கிச் செல்ல அடையார் கிளப் கேட் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி ஏ.பி.எம். அவென்யூ மற்றும் டர்ன் புல்ள் சாலை விரிவாக்கம் வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பு வழியாக அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் டி.டி.கே.சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஸ்ரீராம் நகர் தெற்கு தெரு, ஸ்ரீ ராம் நகர் மேற்கு தெரு, செனோடாப் 2வது லேன் மற்றும் ஐ.கேமுப்பனார் மேம்பால சர்வீப் சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

metro-work

அடையாறு போட் கிளப் கேட் சாலை, முதல் அவென்யூ போட் கிளப் சாலை மற்றும் போட் கிளப் சாலை ஆகியவை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சேமியர்ஸ் சாலையில் இருந்து போட் கிளப் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.. மேற்கண்ட வாகனங்கள் அடையாறு போட் கிளப் கேட் சாலை வழியாகச் செல்லலாம்

ஏபிஎம் அவென்யூ மற்றும் டர்ன் புல்ஸ் விரிவாக்கம் ஆகியவை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாகனங்கள் அடையார் கேட் கிளப் சாலையிலிருந்து கோட்டூர்புரம் மேம்பாலத்தை நோக்கிச் செல்லலாம். வாகனங்கள் ஜி.கே. மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலையிலிருந்து டர்ன் புல்ஸ் விரிவாக்கம் நோக்கிச் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ