தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
![]()

பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பதவியில் இருந்த அவர், அண்மையில் பாஜகவில் இணைந்து அக்கட்சி செயற்குழு உறுப்பினரானார்.
இந்நிலையில் குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன்” எனக் கூறியுள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, congratulations to @BJP4India National executive committee member Smt. @khushsundar avl for being nominated as a Member of the National Commission for Women.
This is a recognition of her relentless pursuit & fight for women's rights! pic.twitter.com/ztwiQ8DCoN
— K.Annamalai (@annamalai_k) February 27, 2023
குஷ்புவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜகவில் உள்ள நடிகைகளை திமுக நிர்வாகி அவதூறாக பேசியதை மகளிர் ஆணையம் வரை கொண்டு சென்றவர் குஷ்பு. தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்புவிடம் திமுக நிர்வாகி மன்னிப்பு கேட்டார். பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு வாழ்த்துகள். இதற்கு நீங்கள் தகுதியானவர், கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நீங்கள் பெரும் உதவியாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


