பீகார் மாநிலத்தில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (20ம் தேதி) விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.


பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணிகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்நிலையில் அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நளந்தாவை சேர்ந்த அகிலேஷ்குமார் என்பவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம் என்றும் மாதிலத்துக்கு அதற்கான அதிகாரம் இல்லை, எனவே விதிமுறைகளை மீறி நடத்தப்படும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கை அடுத்த வெள்ளிக்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தார்


