சென்னை டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி மூன்றாவது நாளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பாக மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் டிபிஐ வளாகத்தில் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 2009-ஆம் ஆண்டு முதல் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தங்கள் குடும்பத்தினருடன் இடைநிலை ஆசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 2009-ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் இணையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களில் 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றிட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை. முதலமைச்சர் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை மேற்கொள்ளும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்கின்றனர்.


