கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வாத்தி. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்த இப்படம் நேரடியாக தமிழிலும் ,தெலுங்கிலும் வெளியானது.


இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது . ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தில் தமிழக விநியோக உரிமையை பெற்றது. இன்று திரையரங்குகளில் திரையிடப்பட்ட வாத்தி படம் இன்று காலை 7:15 மணி அளவில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் வெளியானது.
இப்படத்தை காண்பதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரளாக திரண்டு வந்திருந்தனர். படம் பார்ப்பதற்கு முன்பு வெடி வெடித்து தனுஷின் கட்டவுட்க்கு பால் அபிஷேகம் செய்தனர். ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தொடர்ந்து வாத்தி படமானது வெளியானது.

வாத்தி திரைப்படத்தை திரையில் பார்த்த ரசிகர்கள் கூறியதாவது, தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படம் கல்வியை மயக்கருத்தாக வைத்து உருவாகியுள்ளது. அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்றும் கல்வி இல்லையெனில் இங்கு எதுவும் இல்லை என்கின்ற கருத்தாக்கத்தை இத்திரைப்படம் கூறி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்த சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறி இருக்கின்றனர். இது போன்ற படங்களை தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


