spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralதற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

-

- Advertisement -

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி விஜயகுமார். இவர், தனக்கு சொந்தமான நிலத்தை சேலத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளருக்கு கிரயம் செய்து, சுமார் 25 லட்ச ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. வாங்கிய கடனை விஜயகுமார் திருப்பி செலுத்தாத நிலையில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர், நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

we-r-hiring

இதனிடையே தான் ஏமாற்றபட்டதாகவும் இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் வீடியோ பதிவிட்டு விஜயகுமார் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள எடப்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து எடப்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ