‛‛என் தம்பி அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இன்று தம்பி தைரியமாக இறங்கி அடிச்சி நொறுக்குறாரு. அவர் நல்லா வரணும்னு ஆசைப்படுகிறேன்” என்று நடிகர் பிரபு உணர்ச்சிவசப்பட்டு வாழ்த்து தெரிவித்துளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளது. இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மாநாடு நடக்கும் இடத்தில் காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் மாநாடு நடக்கும் மாலை வேளையில் மக்களின் கூட்டம் என்பது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடி, கொள்கைகள் பற்றி பேச உள்ளார். இதனால் இந்த மாநாடு அனைத்து மக்களிடமும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் நடிகர் விஜயின் இந்த அரசியல் மாநில மாநாட்டுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியில் தனியார் நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பங்கேற்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் நடிகர் விஜயின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர்.
‘‘என் தம்பி விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார். அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். என் அப்பாவின் ஆசீ அவருக்கு நிறைய இருக்கும். இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை தொடங்கலாம்.
இன்று தம்பி தைரியமாக இறங்கி அடிச்சி நொறுக்குறாரு என்றால் அதற்கு ஆண்டவன் அவர் கூட இருக்கும். தம்பி நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுகிறேன். தம்பி நல்லா வரணும்னு நான் ஆசைப்படுகிறேன். அவர் ஒரு நல்ல பிள்ளை. நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை இருக்கு” என்றார்.