spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

-

- Advertisement -

அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு2022 – ல் பிப்ரவரி 19 – ல்  நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது  கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  40 பேரின் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது.

காவல் துறை தரப்பு விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் ஆயுதங்களை கொண்டு நரேஷ்குமாரை தாக்கியது உறுதி செய்து ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது.  இதனை ஏற்று வழக்கு விசாரணையை பரிசீலித்த நீதிபதி கீழ் நீதிமன்ற விசாரணையில் தான் சம்பவம் பற்றிய முழுமையான தகவல் தெரியவரும் என்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ஜெயக்குமாரின் தரப்பில் கோரிக்கை மனுவை ரத்து செய்துள்ளது.

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

we-r-hiring

MUST READ