தளபதி என்றால் அவர்தான், நான் புரட்சி தளபதி அல்ல, என் பெயர் விஷால் மட்டுமே என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

லத்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், “ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன், உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே உதவும், தவறான வழிகளில் கிடைக்கும் பணம் நிலைக்காது.

தளபதி என்றால் அவர்தான், நான் புரட்சி தளபதி அல்ல, என் பெயர் விஷால் மட்டுமே. லத்தி திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக அமையும், லத்தி படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் தலா ஒரு ரூபாயை எடுத்து விவசாயிகளுக்கு வழங்கவுள்ளேன். கடவுள் அருள் இருந்தால் நானும் ஒரு இயக்குநராக விஜய்யை வைத்து படம் இயக்குவேன். விஜய்யை வைத்து படம் இயக்குவது என்பது எனது நீண்ட நாள் ஆசை. மிஷ்கினுடன் மீண்டும் இணைய நான் தயாராக இல்லை. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு.. டிரெய்லர் நல்லா தருவேன் ஆனா படம் failure தருவேன் இது என் சாபக்கேடு. மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்-2, காத்திக் சுப்ராஜ் தயாரிக்கும் படம் என 3 படங்களின் வேலை உள்ளதால், விஜய் 67 படத்தில் நடிக்க முடியவில்லை. லோகேஷ் கனகராஜ் உடன் வரும் காலங்களில் நிச்சயம் இணைவேன்” என பேசினார்.