Homeசெய்திகள்வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:

-

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்:

சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் நாளை முதல் செப் 11ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இத்திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சென்னை ,பெங்களூரு, தூத்துக்குடி ,கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக திருச்சி ,தஞ்சாவூர், சிதம்பரம் ,பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் போக்குவரத்து கழகம் தகவல்:

இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக தொலை தூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன .இச்சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது, என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ