நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு துவங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழில் சோசியல் மீடியாவின் கிங் என்றும் அவரை கூறலாம். அவரது படங்களின் அப்டேட் வெளியாகும் போது சோசியல் மீடியாவே அதிர செய்வது விஜய் ரசிகர்கள் தான். தமிழில் சோசியல் மீடியாக்களில் அதிகம் செல்வாக்கு மிக்க நடிகர் விஜய் தான்.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருந்த விஜய் நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்காமல் இருந்தார்.
தற்போது விஜய் இன்ஸ்டாகிராமிலும் களமிறங்கியுள்ளார். அதிகாரபூர்வ கணக்கு துவங்கிய அவர் அதனுடன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் விஜய் வந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அவரைப் பின் தொடர குவிந்துள்ளனர்.
View this post on Instagram
தற்போது பாலோவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி உள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அவர் ஒரு மில்லியன் பாலோவர்க்ளை எட்டி விடுவார் என்பது நிச்சயம்.