Homeசெய்திகள்ஜெயலலிதா கூப்பிட்டே வராத அஜித்... உதயநிதிக்காகவா வரப்போகிறார்..?- ரசிகர்கள் வேதனை

ஜெயலலிதா கூப்பிட்டே வராத அஜித்… உதயநிதிக்காகவா வரப்போகிறார்..?- ரசிகர்கள் வேதனை

-

- Advertisement -

24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் பங்கேற்க உள்ளார் நடிகர் அஜித் குமார்.பைக் ரைடுக்கு தயாரான அஜித்..... லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

இதனையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித் குமாருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து‘நமது முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நமது #திராவிட மாதிரி அரசு செயல்படுத்தும் திட்டங்கள் உட்பட பல்வேறு முன்முயற்சிகளை ஆதரித்து, அங்கீகரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றிணைந்து செயல்ப்டுவோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

விஜய் எதிர்ப்பு நிலையையொட்டி உதயநிதி ஸ்டாலின் இப்போது வாழ்த்து தெரிவித்து இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராரஜன், ‘‘விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை’ என தெரிவித்தார்.

‘‘இன்னைக்கு உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை. எனத் தெரிவித்துள்ளார்

விஜயை கோபப்படுத்தி அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கவே உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளதாக எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அஜித் நலம் விரும்பிகள், ‘‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. அஜித்திற்கு வேறு வேலைகள் உண்டு., ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்த சமயத்திலேயே வேண்டாம் என்று கூறியவர். தனது சுயநலத்துக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்றங்களையே களைத்தவர். இப்போது நடக்கும் அரசியலில் ஒதுங்கி இருக்கும் அஜித்தை இழுப்பது நல்லதல்ல’’ என தெரிவித்துள்ளனர்.

MUST READ