Homeசெய்திகள்கட்டுரை80 ஓட்டு - வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

-

- Advertisement -

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி படுத்தப்பட்டு உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பெங்களுரு மகாதேவபுரா தொகுதியில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் 80 வாக்காளர்கள் என ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளும், இதனை ஒட்டி இந்தியா டுடே ஊடகம் நடத்திய கள ஆய்வில் வெளிவந்த உண்மைகள் குறித்தும் பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளதை ராகுல்காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். ஆனால் இதனை தி இந்து நாளிதழை தவிர பெரும்பாலான ஆங்கில ஊடங்கள் புறக்கணித்தன. தமிழ்நாட்டில் தந்தி பத்திரிகை இரண்டாவது பக்கத்தில்  செய்தி வெளியிட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில் அதை முன்வைத்து விவாதத்தை கிளப்ப வேண்டிய பிரதான ஊடகங்கள் தங்கள் கடமையை செய்யவில்லை. அதேநேரத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் சில மையநீரோட்ட ஊடகங்கள் இந்த வேலையை செய்துள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் லக்னோவை சேர்ந்த ஆதித்யா ஸ்ரீவத்சவா என்பவர். அவருடைய வீட்டை தேடி பத்திரிகையாளர்கள் சென்றுவிட்டனர். கடந்த 2017-18ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர், தன்னுடைய வாக்கையும் மும்பைக்கு மாற்றம் செய்துள்ளார். பின்னர், பெங்களுருவில் வேலைக்கு வந்து, அங்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார். அதே வேளையில் லக்னோவிலும் அவருடைய பெயர் உள்ளது. இதனை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்தபடியாக ஒரே வீட்டில் 80 பேர் உள்ள விவகாரம். இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடகங்கள் அங்கு சென்று வீட்டின் உரிமையாளரான ஜெயராம் ரெட்டியிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். அவர் தன்னை பாஜககாரர் என்றும், பின்னர் இல்லை என்றும் மாற்றி மாற்றி பதில் அளிக்கிறார். அந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரிக்கும் போது மேற்குவங்கத்தை சேர்ந்த திபாங்கர் என்கிற தொழிலாளி குடியிருக்கிறார். அந்த வீட்டிற்கு அவர் வந்து ஒரு மாத காலம் தான் ஆகிறது. அவருக்கு அங்கிருந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இதேபால், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் அந்த வீட்டில் உள்ள 80 வாக்காளர்களை யார் என்றே தெரியாது என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சில தவறுகளை செய்திருக்கிறது. அது விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகள் ஒருவரும் பேசவில்லை. அப்போது சந்தேகமும் வலுக்கிறது.

தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், எந்த கட்சிக்கு சார்பற்றது என்கிற அடிப்படையில்தான் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். பாஜக மீது தவறு இல்லாதபட்சத்தில், அவர்கள் தேர்தல் ஆணையத்தை முறையாக செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். மாறாக தேர்தல் ஆணையத்தின் தவறுகளை மறைக்கும் வகையில் ராகுல்காந்தி மீது அவதூறுகளை பரப்புவது, அவர் எழுப்பிய கேள்விகளை அபத்தமானது என்று சொல்கின்றனர். ராகுல்காந்தி மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் உத்தரகாண்ட் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறபோது, காங்கிரசுக்கு ஆதரவான மனநிலை இருந்தது. ஆனால் உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் தோல்வியை சந்தித்தோம். மத்திய பிரதேசத்திலும் தோல்வி அடைந்தோம். மகாராஷ்டிராவில் தோல்வி ஏற்பட்ட போதுதான் தனக்கு சந்தேகம் ஏற்பட்டது என்கிறார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மையினரான மராத்தா, மகர் சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ளனர். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் 5 மாதங்களில் அதிகளவு போலி வாக்காளர்களை சேர்த்து, பாஜகவினர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்.

கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகளை காங்கிரஸ் 6 மாத காலமாக ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை தர மறுத்துவிட்டபோதும், அவர்கள் கடின முயற்சியால் முறைகேட்டை வெளிப்படுத்தினர். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து, ஆதித்யா ஸ்ரீவத்வசா பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றது. பெங்களுரு மற்றும் லக்னோ தொகுதியில் உள்ள அவரது வாக்காளர் அட்டை விவரங்களை கண்டுபிடித்து வெளியிடுகிறபோது, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் இணையதளத்தை முடக்கிவிட்டு சென்றுவிட்டது. மக்கள் கண்காணிக்க தொடங்கிய உடன் தேர்தல் ஆணையம் டேட்டாக்களை மறைக்கிறது என்றால்? அதில் முறைகேடு நடந்துள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அப்போது பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மோசடி செய்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் ஒரு 25 இடங்களில் மட்டும் பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டுசேர்ந்து மோசடியில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது வரை பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

கர்நாடகாவில் யாத்திரை செல்கின்ற ராகுல்காந்தி அரசியலமைப்பு சட்டத்தை காண்பித்து, தேர்தல் ஆணையம் – பாஜக இணைந்து செய்துள்ளது அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதலாகும் என்று சொல்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ஆங்காங்கே சில கட்சிகள் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் எழுச்சி வர வேண்டும். காங்கிரஸ் – பாஜக இடையே 25 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக மாலை 5 மணிக்கு மேலாக தான் அதிகளவில் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்டது. ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து விட்டது. அந்த எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிய கவலை நமக்கு வரவேண்டும். அதை காண்பித்துதான் பாஜக வளர்வதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அனுதாபத்தை சேர்த்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களான பிரவீன் கந்தெல்வால்- சாந்தினி சௌக் தொகுதி, ஹர்ஷ் மல்ஹோத்ரா- கிழக்க டெல்லி தொகுதி, சுபான்சூரி ஸ்வராஜ் – புது டெல்லி தொகுதி, மனோஜ் திவாரி – வடகிழக்கு டெல்லி தொகுதி, யோகேந்திர சாண்டேலியா- வடமேற்கு டெல்லி தொகுதி, திருமதி கமல்ஜீத் ஷெராவத் – மேற்கு டெல்லி தொகுதி, ராம்வீர் சிங் பிதூரி – தெற்கு டெல்லி தொகுதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணியை முற்றிலுமாக துடைத்தெறிந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவினர் பயணிக்கும் வாக்காளர்கள் என்கிற ஒரு புதிய வகை வாக்காளர்கள் உருவாகி உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வாக்களிக்க முடியாது. அப்போது அவர்களின் பெயர்களில் போலியாக வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் மிரட்டல் விடுக்கிறது. போலியான தகவல்களை ராகுல்காந்தி தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சொல்கிறார்கள். தங்களை கேள்வி கேட்டால் சிறைக்கு தள்ளுவோம் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் மிட்டலுக்கு அஞ்சாமல், கேள்வி கேட்காவிட்டால் இந்தியா ஒரு திறந்தவெளி சிறையாக மாறும். எதிர்க்கட்சிகளும், மக்களும் திரண்டு போராடினால்தான் இது மாறும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ